உனக்கு தைரியம் இருந்தா அடிடா.? வடிவேலு போல் வம்பு இழுக்கும் அசிம்.. செம ரகலையில் பிக்பாஸ் வீடு.! சாட்டையை சுழற்றுவாரா கமல்.. வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனவே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வரும் நிலையில் தற்போது இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் அசிம் மற்றும் அமுதவாணன் ஆகிய இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காகவும் சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பிக்பாஸ் தொடர்ந்து ஏராளமான டாஸ்க்க்களை வழங்கி வருகிறார். எனவே வாரம் வாரம் பிக்பாஸ் வீட்டில் ஏதாவது ஒரு டாஸ்க் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த வாரம் நடைபெறும் டாஸ்க் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் ஆவேசத்துடன் விளையாடி வருகிறார்கள்.

அனைவரும் பயங்கர சண்டை ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏலியன்கள் மற்றும் பழங்குடியினர் என இரண்டு டீம்களாக பிரிந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் சற்று முன்பு வெளியான வீடியோ ஒன்றில் கதிரவன் அமுதவாணன் மோத அதை அசையும் பார்த்ததும் ஓடி வந்து அவருடன் வம்பு இழுக்கிறார்.

அசிம் அதனை எடுத்து நீ எதுக்காக கேட்கிறாய் என அமுதவாணன் சொல்ல நான் அப்படித்தான் கேட்பேன் என அசிம் ஆத்திரத்துடன் பதில் அளிக்கிறார். இதனை அடுத்து அசிமை அமுதவாணன் உசுப்பேத்த உடனே அசிம் அடித்து விடுவாய் என்று சொன்னாய் அல்லவா தைரியம் இருந்தால் என் மேல் கை வைத்து பாரு என்று கூறியிருப்பது சக போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அசிமிருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என போட்டியாளர்கள் உள்ளிட்ட ரசிகர்கள் வரை அனைவரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் கமலஹாசன் அதனை தண்டித்தார் எனவே அதன் பிறகு அசிமும் எல்லை மீறாமல் இருந்து வந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் சண்டையில் ஈடுபட்டுள்ளார் எனவே கமலஹாசன் இதற்கு என்ன சொல்ல போகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.