விஜய் டிவி தொலைக்காட்சி பல்வேறு விதமான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோகளை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இப்போ கூட விஜய் டிவி தொலைக்காட்சி ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை நடத்தியது இது தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி உள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்க விஜய் டிவி முடிவெடுத்துள்ளது வருகின்ற அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து உள்ளார். அதற்காக சம்பளமாக சுமார் 75 கோடி வாங்க இருக்கிறார் என கூறப்படுகிறது.
பிக்பாஸ் 6 வது சீசனில் யார் யார் கலந்து கொள்வார்கள் என தெரிந்து கொள்ள மக்கள் மத்தியில் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஒருவரை கூட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சில பிரபலங்களின் பெயர்கள் மட்டும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் ரக்சன், திவ்யதர்ஷினி, ஜிபி முத்து,மதுரை முத்து மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அர்ச்சனா கலந்து கொள்வார் என கூறப்படுகிறது இவர்களை தவிர தற்போது ஒரு முக்கிய சீரியல் நடிகையையும் கலந்து கொள்ள இருக்கிறார் என பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையாயமான பாத்திமா பாபு சொல்லி உள்ளார்.
பிக்பாஸ் 6 வது சீசனில் எத்தனை போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது ஆனால் ஒருவரை பெயரை மட்டும் நான் சொல்கிறேன் என கூறியுள்ளார். வேறு யாரும் அல்ல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் சத்யா 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆயிஷா தான் பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்து கொள்ள இருக்கிறார் என பாத்திமா பாபு கூறியுள்ளார்.