எங்கும் எதிலும் போட்டிதான் அந்த வகையில் டிஆர்பிஎல் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க பல தொலைக்காட்சிகள் போட்டி போடுகின்றன இதற்காக அனைத்து தொலைக்காட்சியும் புதிய புதிய சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறது அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி நேரம் காலம் பார்க்காமல் நினைத்த பொழுது எல்லாம் புது புது ரியாலிட்டி ஷோகளை தொகுத்து வழங்கும்..
அது போல இப்பொழுது ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் மக்களை இன்னும் கவர விஜய் டிவியில் தனது முக்கிய ஆயுதமான பிக்பாஸ் நிகழ்ச்சியை களம் இறங்குகிறது ஆம் வருகின்ற வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி பிக்பாஸ் ஆறாவது சீசன் வெளிவர இருக்கிறது.
இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இந்த சீசனை பெரிய அளவில் மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர் இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்பது நமக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிய வில்லை..
ஆனால் உலக நாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உறுதியாக உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளே ஒரு பிரபலம் போய் வந்துவிட்டார் . அந்த பிரபலம் யாரும் இல்ல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமான சாம் விஷால் மற்றும் பேச்சாளர் ராஜ்மோகன் ஆகியவர்கள்..
போய் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு சுற்றி பார்த்து உள்ளனர் அந்த புகைப்படங்களை தற்போது தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் புகைப்படத்தை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டாடி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..