பல புதுப்புது ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் வித்தியாசமான சீரியல்களை கொடுத்து மக்களை கவர்ந்து டாப் சேனல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருவது விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் பலருக்கும் ஃபேவரிட் ஆக அமைந்துள்ளன.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சிக்கும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த அளவிற்கு பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் தற்போது வரை பிக் பாஸ் ஐந்து சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இதில் கடைசியாக நிறைவு பெற்ற ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின் செய்தார்.
இந்த நிலையில் கூடிய விரைவில் பிக் பாஸ் ஆறாவது சீசனும் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமக்கள் ஒவ்வொன்றாக விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் பிக் பாஸ் 6 நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை கமல் தான் கொடுத்து வருகிறார்.
இது போக பிக்பாஸ் 6 கான போட்டியாளர்களையும் தேர்வு செய்து வருகின்றனர். இதுவரை எந்த ஒரு போட்டியாளரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் விஜே ரக்சன், டிடி என்கின்ற திவ்யதர்ஷினி, பாடகி ராஜலட்சுமி, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை ஆயிஷா போன்ற சிலரின் பெயர்கள் நாளுக்கு நாள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
இந்த சீசன் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் வீடு சற்று வித்தியாசமாக காட்சி அளிக்கும் அந்த வகையில் தற்போது இந்த சீசனில் காடு போன்ற பிக் பாஸ் செட் அமைக்கப்பட்டுள்ளது. ஆம் பிக் பாஸ் ஆறாவது சீசனுக்கான செட் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..