ரசிகர்களை பிரமிக்க வைத்த பிக்பாஸ் சீசன் 6 வீட்டின் புகைப்படம் – நீங்களே பாருங்கள்..!

bigg boss

சின்னத்திரையில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி வருடம் தோறும் அரங்கேறி வருகிறது. இது தற்போது வரை ஐந்து சீசன்கள் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் ஆறாவது சீசன் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் கிராண்ட் லான்ச் நடைபெற உள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் தினமும் 9:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் டெலிகாஸ்ட் ஆக உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பல ரசிகர்கள் கூட்டம் உள்ளன அதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் பிக் பாஸ் ஆறாவது சீசனில் யார் யார் கலந்து கொள்ள உள்ளனர் என்பதை காண ஆவலாக இருக்கின்றனர்.

அதன்படி விஜே ரக்சன், திவ்யதர்ஷினி, ரோஷினி ஹரிப்ரியன், விஜே அர்ச்சனா, ராஜலட்சுமி, ஷில்பா மஞ்சுநாத், தர்ஷா குப்தா போன்ற சிலரின் பெயர்களும் சோசியல் மீடியாவில் தினம் தினம் அடிபட்டு வருகின்றன இருந்தாலும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை அதனால் ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சியை காண பலரும் ஆவலாக இருக்கின்றனர்.

bigg boss
bigg boss

இந்த நிலையில் பிக் பாஸ் வீடு ஒவ்வொரு சீசனிலும் வித்தியாசமாக தோற்றமளிக்கும் இந்த வீட்டின் இன்டீரியர் டெக்னீஷியன்கள் ரசிகர்களை கவரும் படியாக பல விஷயங்களை வீட்டினுள் எடுத்துரைத்திருப்பார்கள். அதன்படி தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசனுக்கான வீடு ரெடியாகி உள்ளது. அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன இதில் ஒவ்வொரு விஷயமும் வித்தியாசமாக உள்ளது.

bigg boss

இந்த முறை நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது மற்றும் ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் ஒரே பெட்ரூம் ஏரியா தான் அமைந்துள்ளன. டைனிங் டேபிள் பாத்ரூம் கார்டன் என அனைத்தும் சூப்பராக இருக்கிறது. இந்த முறை பிக் பாஸ் வீட்டில் ஜெயில் கூண்டு போன்ற செட்டப்பில் உள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படங்களை..

bigg boss
bigg boss