பிக்பாஸ் சீசன் 6 -ல் முதல் போட்டியாளராக உள்ளே போகும் குக் வித் கோமாளி பிரபலம்.! யார் தெரியுமா.?

bigg-boos-6-
bigg-boos-6-

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு சீசனும் மக்கள் பலருக்கும் பிடித்த சீசனாக அமைந்துள்ளது மேலும் அதில் கலந்து கொண்ட சில போட்டியாளர்களும் இன்று வரை மக்களின் ஃபேவரட் போட்டியாளராக இருந்து வருகின்றனர்.

அப்படி கடைசியாக நிறைவு பெற்ற பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ராஜூ ஜெயமோகன் முதலிடத்தை பெற்றிருந்தார் அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பிரியங்கா பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் தவராமல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனின் ஆறாவது சீசன் கூடிய விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகின்றன.

அதற்கான வேலைகள் சைலண்டாக நடைபெற்று வருகின்றன. இதில் போட்டியாளராக யார் யாரை கலந்து கொள்ள வைக்கலாம் என இதற்கான யோசனை ஒரு பக்கம் நடந்து வருகின்ற நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமலஹாசன் தற்போது படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிறார்

அதனால் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்விக்குறி மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் ஆறாவது சீசனில் முதல் போட்டியாளராக குக் வித் கோமாளி பிரபலம் களமிறங்க உள்ளதாக கூறப்படுகின்றன.

ஆம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வரும் ரக்சன் பிக் பாஸ் ஆறாவது சீசனில் முதல் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார் என தெரியவந்துள்ளது.