அண்மைக்காலமாக சின்ன திரையில் தனது திறமையை காட்டும் பிரபலங்கள் பலரும் வெள்ளி திரையில் கால் தடம் பதிக்கின்றனர் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி பல சின்னத்திரை பிரபலங்களை வெள்ளி திரைக்கு அனுப்பி உள்ளது அந்த அளவிற்கு சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்துகிறது அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது திறமையை காட்டிய போட்டியாளர்கள்..
பலரும் வெள்ளி திரையில் ஹீரோ ஹீரோயின் குணச்சித்திர பிரபலங்களாக நடித்து அசத்தி வருகின்றனர். அப்படி கடந்த பிக் பாஸ் சீசன் 5 யில் ஒன்னும் தெரியாத பாப்பா போல அறிமுகமாகி பின் அனைத்தையும் கற்றுக்கொண்டு பிக் பாஸ் வீடு இப்படித்தான், ஒவ்வொரு போட்டியாளர்களையும் இப்படித்தான் அணுக வேண்டும்.
என்பதை சரியாக புரிந்து கொண்டு காய் நகர்த்தி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் தாமரைச்செல்வி. இருப்பினும் இவர் இறுதிவரை பயணிப்பார் என ரசிகர்களும் மக்களும் எதிர்பார்த்தனர் ஆனால் இவர் இறுதி போட்டிக்கு செல்ல முடியாமலேயே வெளியேறிவிட்டார். இருந்தாலும் இவரை மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்து போனதால் தாமரைச்செல்வியை..
தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் வெளியே வந்த அவர் தனது ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வந்தார். ஏன் இப்பொழுது கூட விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் தாமரைச்செல்விக்கு வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தாமரைச்செல்வி தனது சோசியல் மீடியா பக்கத்தில் சினிமாவில் நடிக்கிறேன் என்று கூறி ரோபோ சங்கர் மற்றும் சிங்கம்புலி ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் என கூறி தொடர்ந்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.