விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமடைந்து உள்ளார்கள். பொதுவாக இந்நிகழ்ச்சியில் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து வருகிறது.
எனவே இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என இன்னும் சில மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைவரும் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விடுகிறார்கள்.
இந்நிலையில் தமிழில் விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்நிலையில் ஐந்தாவது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளதாகவும், தொகுப்பாளராக கமலஹாசனுக்கு பதிலாக வேறு ஒருவர் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 4 மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் சம்யுத்தா. இவர் இதற்கு முன்பு மாடலிங்காக பணியாற்றி வந்துள்ளார். பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே இவர் வெளியேறி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சம்யுத்தா சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், ஹீரோயினாகவும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்தவகையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் துல்கர் தர்பார் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.
இந்நிலையில் விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 இரண்டு சீரியல்களின் மஹா சங்கமத்தின் பொழுது சம்யுத்தா, ரியோ ராஜ், சோம் சேகர் மற்றும் ஆரி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதனைத்தொடர்ந்து சமயத்தார் தற்பொழுது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிவரும் அம்மன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
இந்த வகையில் இவர் அம்மன் சீரியலில் நடிக்கும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.