களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இவரின் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து கலகலப்பு, மெரினா, மூடர் கூட்டம்,மதயானை கூட்டம் என இன்னும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ஆர்மி உருவானது. ஆனால் இந்நிகழ்ச்சியில் இவர் பல பிரச்சினைகள் ஏற்பட்டதால் நிகழ்ச்சியை விட்டு இவராகாவே வெளியேறிவிட்டார்.
ஆனால் இந்நிகழ்ச்சியில் ஆரவ்வை காதலித்து வந்தார். ஆனால் ஆரவ்வின் ஓவியாவின் காதலை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் ஓவியா மெல்லமெல்ல அந்த காதலில் இருந்து வெளி வந்தார். பிறகு இவர் தொடர்ந்து சினிமாவில் தன் கவனத்தை செலுத்தி வந்தார்.
அதன்பிறகு இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் கவர்ச்சியில் அதிக ஆர்வத்தை காட்டியதால் ரசிகர்கள் ஓவியாவுக்கு என்னதான் ஆனது என்று பல கேள்விகள் எழுப்பி வந்தார்கள்.
இந்நிலையில் தற்பொழுது ஓவியா தனது புதிய காதலருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.ஆம் ஓவியா தற்போது வேறு ஒருவரை காதலித்து வருகிறார். அவரோட இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லவ் என்று பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதோ அந்தப் புகைப்படம்.