கமல்ஹாசனைப் போல ஒரு வொஸ்ட் கேரக்டர் யாருமே இல்லை என்று கூறிய ஒரு பெண்மணி,அவர் யார் தெரியுமா? அதுவேறு யாருமில்லை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நித்தியா தான். நாம் அனைவருக்கும் தாடி பாலாஜி என்பவரை தெரியும், இவர் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நகைச்சுவையாளராக நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 2விலும் பங்கேற்றார். அப்பொழுது அவரது மனைவியான நித்யாவும் பங்கேற்றார். இவர்தான் கமல்ஹாசன் ஒரு வொர்ஸ்ட் கேரக்டர் என்று கூறினார். பிக்பாஸ் சீசன் 2வில் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் கலந்து கொண்டதற்கான காரணம், இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து இருந்தனர், இந்நிலையில் தான் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற விஜய் டிவி முடிவு செய்தது.
ஏனென்றால் தாடி பாலாஜி விஜய் டிவியில் ஒரு முக்கியமான நபராக வலம் வந்தார், அவர் காமெடி ஷோக்களில் நடுவராக இருந்தார்.ஆகையால் விஜய்டிவி தக்க முடிவினை எடுத்தது, பிக்பாஸில் ஒன்றாக இருந்திருந்தாலும் சரியாக பேசிக்கொள்ளவில்லை.
பிக்பாஸ் முடிந்த பிறகும் அவர்கள் இருவரும் விஜய் டிவி எதிர்பார்த்த மாதிரி சேரவில்லை இந்நிலையில் தாடி பாலாஜி தன் மனைவியிடம் இருக்கும் தன் மகளை மீட்டுத்தருமாறு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளித்தார்,இதுதொடர்பாக பேசிய நித்யா, நான் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன் என் தரப்பு நியாயத்தை நான் சிங்கம் போல் கூறிவிட்டேன் என்றார்.
இந்த நேரத்தில் கமல்ஹாசன் நித்யாவிற்கு கூறிய அறிவுரையை பற்றி நித்யாவிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நித்யா “அவரைப் பற்றி ஏதும் பேசாதீர்கள் என்னிடம் நிறைய கருத்துகள் உள்ளது அவரைப்போன்ற வொர்ஸ்ட் கேரக்டரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை” என்று கூறினார் இது அனைவர் இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.