அடுத்த சிவகார்த்திகேயன் இவர்தானா.? பிக்பாஸ் வீட்டில் இவரை கவனித்தீர்களா.!

bigg-boss-2

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் ஏராளமானோருக்கு சரியான ஒரு அங்கீகாரத்தை பெற்று தரும் நிகழ்ச்சியாகவே பிக்பாஸ் திகழ்கிறது. தமிழில் பிக்பாஸ் சீசன் 4 முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் அக்டோபர் 3ஆம் தேதியன்று பிக்பாஸ்  5 தொடங்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது 18 போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ள நிலையில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் நடந்த ஏராளமான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒருவர் சிவகார்த்திகேயனாக மாறி வருகிறார் அதனை மற்ற போட்டியாளர்கள் கவனிக்க வில்லை என்ற தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்று வருபவர் தான் நடிகர் ராஜி ஜெயமோகன். திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் அதோடு இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடரில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலை தொடர்ந்து அறந்தாங்கி நிஷாவுடன் இணைந்து காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள் அவர்கள் ராஜீ பாய் என்று அன்புடன் அழைப்பார்கள்.  அதோடு இவர் பாக்கியராஜி சிஷ்யன் என்பது குறிப்பிடத்தக்கது பிக்பாஸ் முதல் நாளில் பாக்கியராஜ் வாழ்த்துக் கூறி தான் அனுப்பி வைத்தார்.

raji jeyamohan
raji jeyamohan

இவர் அனைத்து போட்டியாளர்களிடமும் மிகவும் கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பழகி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது ரசிகர்கள் இவரை பார்த்து இவர் நடந்து கொள்ளும் விதம் பேச்சு அனைத்தும் நடிகர் சிவகார்த்திகேயனை போல் உள்ளதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். அதோடு இன்னும் சில ரசிகர்கள் நீங்கள் கவின் மற்றும் சிவகார்த்திகேயனின் நண்பர் என்று தெரியும் எனவே இவர்களை போல நீங்கள் நடந்துகொள்ள வேண்டாம் எப்பொழுதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள் அதுவே நல்லது என்று கூறியுள்ளார்கள்.