ரசிகர்கள் மத்தியில் திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான ரசிகர்களை விரும்பும் வகையில் பல ஷாக்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டிஆர்பி-யில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருப்பது விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இவர்கள் காமெடி மற்றும் சுவாரஸ்யம் இரண்டையும் மையமாக வைத்து ஒளிபரப்பி வருவதால் தற்பொழுது உள்ள இளசுகளை கவர்ந்துள்ளது.
அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக உலகம் முழுவதும் புகழ் பெற்ற நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் சினிமாவில் பிரபலமடைந்தும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
இதன் மூலம் பிரபலமடைந்த பலரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கொரோனா மிகவும் வேகமாக பரவி வருவதால் பிக்பாஸ் சீசன் 5 நடைபெறுவதற்கு தாமதமாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் சீசன் 5 இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் அதிரடியாக இருப்போம் என்று கூறியுள்ளார்கள்.
அதோடு கடந்த நான்கு வருடங்களாக ஒரே மாதிரி டாஸ்க் இருந்ததாகவும் சீசன் 5 புது விதமான டாஸ்குகள் இருக்கும் என்றும் முடிவு செய்துள்ளார்களாம் சீசன் 5 இல் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களும் சினிமாவில் பிரபலமடைந்தவர்கள் தான் என்றும் கூறப்படுகிறது.