பிரபா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3 இன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. இந்நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியா இவர்களின் காதல் திரைப்படத்தில் இடம்பெறும் காதல் காட்சிகள் அளவுக்கு இருந்ததால் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் அவரவர்கள் வேலையை பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய வந்துள்ளார். இதன் மூலம் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவரின் முதல் படம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட இன்னும் பலருடன் இணைந்து பிரெண்ட்ஷிப் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளது எனவே படப்பிடிப்புகளும் நடப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே வீட்டிலேயே இருந்து வரும் அனைத்து நடிகைகளும் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது, ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்தவகையில் லாஸ்லியா புடவையில் ஆளை மயக்கும் அழகில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதோடு ஒரு வீடியோவையும் தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.