பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவிக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சியை சினிமாவில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
இந்த வகையில் தமிழில் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 3இன் மூலம் பங்குபெற்று தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்த பெண்ணாவார்.அந்த வகையில் இலங்கையில் ஒரு செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தற்போது இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் உட்பட இன்னும் பலர் இணைந்து நடித்துள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்புகைப்படத்தை தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்படி இவர் பிரபலமடைந்தாரோ.அதே அளவிற்கு இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவகள் லாஸ்லியாவின் அம்மா மற்றும் அப்பா. அந்த வகையில் இவரின் அப்பா சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இந்நிலையில் லாஸ்லியாவின் அம்மா சமீபத்தில் மாடர்ன் உடையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அப்பா இறந்ததற்கு பிறகு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான அன்பை தருவது நீ மட்டும் தான் அம்மா என்ற உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.