தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே லட்சங்களில் சம்பளத்தை வாங்கிய பிக் பாஸ் லாஸ்லியா.! எத்தனை லட்சம் தெரியுமா.?

losliya-tamil360newz
losliya-tamil360newz

losliya first movie salary : தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் வரத்தை அதிகரித்துக் கொண்டே போகிறது, அந்த வகையில் சமூக வலைதளத்தின் மூலம் பல நடிகைகள் சினிமாவில் கால் தடம் பதித்து வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சிலர் நடிகையாக உருவெடுத்து வருகிறார்கள் அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் லாஸ்லியா என்ற இலங்கை பெண் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்து விட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் லாஸ்லியா, இவர் பிக்பஸ் வீட்டில் செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருவார்கள், அந்த அளவு இவருக்கு ஆர்மியை தொடங்கினார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல நடிகைகளுக்கு பேரும் புகழும் கிடைத்தது.

அதைப்போல லாஸ்லியாவுக்கு பட வாய்ப்பு அமைந்து வருகிறது, லாஸ்லியா தமிழ் சினிமாவில் முதன் முதலாக பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார், இந்த திரைப்படத்தில் சிஎஸ்கே அணியின் வீரரான ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் மற்றும் சதிஸ்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டீசர் நண்பர்கள் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது இந்த நிலையில் லாஸ்லியா மேலும் ஆரியா திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார், பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் டீசரில் லாஸ்லியா அழுவது போன்றும் சிரிப்பது போன்றும் காட்டப்பட்டாலும் அதையும் ரசிகர்கள் ரசித்தார்கள்.

இந்த நிலையில் தமிழில் அறிமுகமாகிய இந்த இரண்டு படங்களுக்கும் லாஸ்லியா கிட்டத்தட்ட 25 லட்சத்துக்கு மேல் சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் இந்த சம்பளத்தை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் முதல் திரைப்படத்திலேயே பல லட்சங்கள் சம்பளமா என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.