தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிக்பாஸ் ஜனனி.! ரகசியத்தை போட்டு உடைத்த கமல்

thalapathy-67
thalapathy-67

தமிழ்நாட்டு மக்கள் பலரும் விரும்பி பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஆறாவது சீசன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் ஜிபி முத்து, ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டர், மைனா நந்தினி, சிவின், கதிரவன், ஜனனி, அசீம், விக்ரமன், சாந்தி, மகேஸ்வரி, மணிகண்டன்..

குயின்சி, ஏ டி கே, அசல் கோளாறு, தனலட்சுமி, ஆயிஷா, ஷெரினா, அமுதவாணன் போன்ற 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற கடைசியாக பணப்பெட்டி களுடன் கதிரவன் அமுதவாணன் போன்றவர்களும் வெளியேற இறுதி நிகழ்ச்சிக்கு விக்ரமன், அசீம், சிவின் போன்ற மூன்று போட்டியாளர்கள் சென்றனர்.

இதில் பிக் பாஸ் ஆறாவது சீசனின் டைட்டிலை அசீம் வென்றார் அவரை தொடர்ந்து ரன்னர் விக்ரம் ஆனார். இந்த நிலையில் இறுதி நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஆறாவது சீசனின் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தான் ஜனனி. இவர் இலங்கையை சேர்ந்தவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் பலருக்கும் பரிச்சயம் ஆகியுள்ளார்.

பைனல் நிகழ்ச்சியின் மேடையில் பேசிய ஜனனி நான் வந்த வேலை முடிந்து விட்டது எனக்கு மக்கள் அனைவரும் நிறைய அன்பு கொடுத்து இருக்கிறார்கள். எல்லோருக்கும் என்னை தெரிய வேண்டும் என்று தான் நினைத்தேன் அது நடந்து விட்டது என்று பேசினார் மேலும் கமல், ஜனனியிடம் திரும்ப ஊருக்கு போகிறீர்களா என கேட்டதற்கு இல்லை என பதில் கூறியுள்ளார்.

வீட்டுக்கு போக முடியாத அளவுக்கு இங்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் இல்ல என கமல் கேட்டார். அதற்கு ஜனனி சிரித்தபடியே ஆமாம் என கூறியுள்ளார். இதன் மூலம் தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் உடன் இணைந்து நடிக்க உள்ள அவரது 67ஆவது திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் ஜனனியும் நடிக்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.