Leo Janany: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிக் பாஸ் ஜனனி நடிகர் விஜய்யுடன் காஷ்மீரில் நடந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகை ஜனனி கலந்துக் கொண்டார்.
இதனை அடுத்து சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் விஜய் மற்றும் திரிஷாவுடன் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜனனி தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அப்படி லியோ படத்தில் விஜய்யுடன் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. அப்படி கரு கரு கரு கருப்பாயி, தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் போன்ற பாடல்கள் இடம் பெற்றிருந்த அனைத்து காட்சிகளும் ஹைலட்டாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சீனியில் நடித்திருக்கும் ஜாக்பாட் வாய்ப்பும் ஜனனிக்கு அடித்தது. மேலும் ஜனனிக்கு திருமணம் செய்து வைக்கும் காட்சிகளும் லியோவில் இடம் பெற்றது.
சமீப பேட்டியில் ஜனனி கூறியதாவது, செட்டில் நடிகர் விஜய் தன்னிடம் பேசும் பொழுது தனது பேச்சை பார்த்து விட்டு என் வைஃப் அவரோட சிஸ்டர்ஸ் மாதிரியே பேசுறீங்க.. கதைக்கிறீங்க என்றுதான் பேசுவாங்க என இலங்கை தமிழில் நான் பேசுவதை பார்த்து கேட்டார். மேலும் என் வைஃபும் ஜாஃப்னா தான் தெரியுமா? என்றார்.
இன்று மாலை 5: 30 மணிக்கு இணையதளத்தை சுத்தி சுத்தி அடிக்க போகும் இந்தியன் 2.. மரண மாஸ் அப்டேட்.!
செம சைலண்டாக இருப்பார், ரொம்ப அமைதியா பேசுவார் அடடா என்னை போலவே என்னோட தளபதியும் இருக்காரு என நினைத்து ரொம்ப ஜாலியா இருந்துச்சு என கூறியுள்ளார். இவ்வாறு லியோ திரைப்படத்திற்கு பிறகு ஜனனிக்கு மேலும் ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.