படவாய்ப்பு இல்லாததால் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

bigg boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு அறிமுகமான ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் அறிமுகமாக இருக்கிறது.

மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் சினிமாவில் பெரிதாக பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் பலரையும் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று தருவதற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 1 கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஓவியா.  இந்நிகழ்ச்சியில் இவரின் குணத்திற்காக இவருக்கென ஒரு ஆர்மி உருவானது. இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு  களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இவரின் முதல் திரைப்படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை தந்தது. அதன் பிறகு  ஜீவனின் அமரா,  வேங்கை, முகம் நீ அகம் தான்,  முத்துக்கு முத்தாக என உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் 2018ஆம் ஆண்டு இதி நா லவ் ஸ்டோரி என்னும் படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சிலுக்குவார் பட்டி சிங்கம் திரைப்படத்திலிருந்து நடித்திருந்தார். இவர் தொடர்ந்து இவர் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு இவருடைய திரைப்படங்கள் ஹிட் அடிக்கவில்லை இப்படிப்பட்ட நிலையில்  ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 3 திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார் ஓவியா.

oviya
oviya

இப்படிப்பட்ட நிலையில் பெரிதாக திரைப்படங்கள் கை கொடுக்காத காரணத்தினால் சின்னத்திரைக்கு என்ட்றி கொடுத்துள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் அறிமுகமாக இருக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோட் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் அப்பொழுது பாபா சங்கர், நடிகை சினேகா, சங்கீதா ஆகியோர்களுடன் ஓவியாவும் இணைந்து பணியாற்றியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சில இணையதளத்தில் வைரலாகி வருகிறது.