தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடைசியாக கமலுடன் இணைந்த விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது அதை தொடர்ந்து லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கிறது. பூஜை முடிந்த உடனே சென்னையில் ஷூட்டிங் தொடங்கியது.
அதன் பிறகு படக்குழு தனி விமானத்தின் மூலம் காஷ்மீருக்கு சென்று கடும் குளிர் என்று கூட பார்க்காமல் படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறது. பலியோ திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சிடென்ட் பேக் நிறைந்த ஒரு படமாக இருக்கும் என தெரிய வருகிறது அதனால் படத்தில் விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன்..
மற்றும் மன்சூர் அலிகான், மிஸ்கின், பிரியா ஆனந்த், திரிஷா, பிக் பாஸ் ஜனனி என பல திரைப்பிரபலங்கள் நடித்து வருகின்றனர். அண்மையில் கூட இயக்குனர் மிஷ்கின் காட்சிகள் முடிந்துள்ளதாக அவரே வெளிப்படையாக சொன்னார் மற்றவர்களின் போஸ்சனும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறதாம். இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 இல் என்ட்ரி கொடுத்து பலரது மனதையும் வென்றவர் ஜனனி.
வெளியே வந்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார் மேலும் பட வாய்ப்புகளும் குவிந்தது எடுத்த உடனேயே தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் ஜனனி சமீபத்திய பேட்டி ஒன்றில் கொடுத்துள்ளார்.
அதில் நீங்கள் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்கிறீர்களா என கேட்டுள்ளனர். அதற்காக “அது சீக்ரெட்” வெளியே சொல்ல கூடாது என தெரிவித்துள்ளார். இவர் சொல்வதை வைத்து பார்த்தாலே தெரிகிறது நிச்சயம் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.