பிக் பாஸ் 8 சீசனில் வீட்டு பணிக்கான டாஸ்க் போய்க்கொண்டிருக்கிறது அந்த டாஸ்க் ஒவ்வொரு போட்டியாளர்களின் புகைப்படத்தை கட் செய்து ஒட்ட வைக்க சொல்கிறார்கள் அதில் பெண் போட்டியாளர்கள் முயற்சி செய்து ஒட்டி பார்க்கிறார்கள்.
அதே போல் ஆண் போட்டியாளர்களும் புகைப்படங்களை ஒட்டுகிறார்கள் இதில் தர்ஷா குப்தா சிக்கிக் கொள்கிறார் அதேபோல் ரஞ்சித், அரணவ், சத்தியா, முத்து, சுனிதா, தீபக், விஜே விஷால் என பலரின் புகைப்படங்களை பெண்கள் அணி சேர்ந்து விட்டார்கள் அதனால் ஹவுஸ் கீப்பிங் டாய்லெட் கிளீனிங் வேலையை ஆண்கள் அணி செய்ய வேண்டும் என பிக் பாஸ் கூறி விடுகிறார்.
இதனால் பெண்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ஆண்கள் அணியில் தர்ஷா குப்தா இருக்கிறார் அவரை டாய்லெட் கிளீன் செய்ய சொல்கிறார்கள் அது வேண்டாம் என மறுக்கிறார் அதேபோல் ஹவுஸ் கிளீனிங் செய்ய சொல்கிறார்கள் அதற்கும் மறுக்கிறார் இதனால் விஜெ விஷால் மற்றும் தர்ஷா குப்தா இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தர்ஷா குப்தா நான் தான் அந்த விஷயத்திற்கு மன்னிப்பு கேட்டு விட்டேனே என கூறுகிறார் அதற்கு வி.ஜே விஷால் எல்லாம் செஞ்சிட்டு மன்னிப்பு கேட்டால் சரி ஆகிடுமா என பேசுகிறார்.
இடையில் புகுந்த முத்து தர்ஷா குப்தாவின் அழகில் மயங்கி ஜால்ரா தட்டுவது போல் உனக்காக இந்த வீட்ட நானே கூட்டுகிறேன் என கூறுகிறார். இப்படி தர்ஷா குப்தா வலையில் முதல் ஆளாக முத்து விழுந்துள்ளார் என தெரிய வருகிறது.