அசல் கோளாரால் விக்ரமன், அசீம் இருவரையும் வெளியேற்றிய பிக்பாஸ்.! வெளிவந்த ப்ரோமோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது அந்த வகையில் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தற்பொழுது தமிழில் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கில் அனைவரும் மிகவும் திறமையாக விளையாடி வருகிறார்கள்.

மேலும் இந்த டாஸ்க் மூலம் அனைவரின் உண்மையான முகம் தெரிய வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பொம்மை டாஸ்க் மூலம் விக்ரமனுக்கு மிகப்பெரிய அளவில் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல கிடைத்து இருக்கிறது. மேலும் அசல், ஷெரினா, அசீம் ஆகியோர்களின் முகத்திரையும் அனைவரும் முன்பும் கிழிக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் தங்களால் முடிந்தவரை பல பிளான்களை போட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றைய முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் பொம்மைகள் ஹவுஸில் ஒரு இடம் காலியாக இருப்பதாகவும் அந்த இடத்தில் பொம்மைகளை வைக்க வேண்டும் எனவும் பிக்பாஸ் கூறுகிறார். ஆனால் அசீம் பொம்மையை வைத்துள்ள அசல் கோளாறு மற்றும் விக்ரமன் பொம்மையை வைத்துள்ள அசீம் ஆகிய இருவருமே பொம்மைகளை வைக்கவில்லை.

மேலும் இதற்கு முன்பு இதே போல் மகேஸ்வரி தனலட்சுமி நேரடியாக சண்டை போட்டு வந்த  நிலையில் தற்பொழுது இவர்களும் இவ்வாறு போட்டி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மேலும் சிறிது நேரம் கழித்து பொம்மைகளை யாரும் வைக்காததால் அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் போட்டியிலிருந்து வெளியேறுவதாக பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இவ்வாறு இதனைத் தொடர்ந்து என்னவெல்லாம் இந்த டாஸ்க் நடக்குது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்நிலையில் கடந்த வாரம் சாந்தி வெளியேறிய நிலையில் பிறகு ஜிபி முத்துவும் தானாக முன்வந்து இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இவ்வாறு இந்த வாரம் அசல் கோளாறு வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது ஏனென்றால் அவர்தான் பெண்களை தொட்டு தடவி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பாகி இருக்கிறது.