விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகச் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் இது சீசன் சீசன் ஆக ஒளிபரப்பப்பட்டு வருகிறது தற்பொழுது பிக் பாஸ் ஆறாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜிபி முத்து மட்டும் தனது சொந்த காரணங்களால் வெளியேற..
மற்ற போட்டியாளர்கள் வார வாரம் வைக்கப்படும் எலிமினேஷன் ரவுண்டில் வெளியேறினர். கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரட்சிதா வெளியேறினார் அவரை தொடர்ந்து இந்த வாரமும் எலிமினேஷன் ரவுண்ட் இருக்கிறது. அமுதாவாணன் நேரடியாக டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று பினாலே சென்று விட்டதால் மற்ற போட்டியாளர்கள் இறுதிப் நிகழ்ச்சிக்கு நுழைய ஆர்வத்துடன் விளையாண்டு வருகின்றனர்
இருப்பினும் விக்ரமன், அசீம், சிவின் போன்றவர்கள் இறுதி போட்டிக்கு நுழைவார்கள் என ரொம்ப கான்ஃபிடெண்டில் இருக்கின்றனர் ஆனால் மற்ற போட்டியாளர்களான ஏ டி கே, மைனா நந்தினி, கதிரவன் போன்றவர்கள் டேஞ்சர் சோனில் இருக்கின்றனர் இந்த நிலையில் பணப்பெட்டி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளது.
எப்படியும் கமல் இந்த மூவரில் ஒருவரை வெளியே அனுப்பப் போகிறார் அவர் அனுப்புவதற்கு முன்பாக அந்த பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேற மைனா நந்தினி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்த விஷயத்தை அறிந்த மக்கள் வெளியே மைனாவுக்கு நல்ல ஆதரவு இருந்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல்..
டம்மியாக இருந்த மைனா நந்தினி சம்பளத்துடன் சேர்ந்து இந்த பணப்பெட்டியை எடுத்து வருவது நல்ல விஷயம் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். அப்படி நடக்கும்பட்சத்தில் மீதி இருக்கின்ற ஏடிகே கதிரவன் இருவர்களில் யாரேனும் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது உறுதி என சொல்லப்படுகிறது.