எங்களுக்கு 80 லட்சம் கடன் இருக்கிறது எனக் கூறிய பிக்பாஸ் தனலட்சுமியின் தாயார்.! அப்போ அவங்க நண்பர்கள் சொன்னது பொய்யா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் தனலட்சுமி. அவருடைய நண்பர்கள் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் தனலட்சுமி இவருக்கு சிறிய வயதில் இருக்கும் போது நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சில திரைப்படங்களிலும், பறை இசை ஆல்பங்களிலும் நடித்து இருக்கிறார். தற்பொழுது இவர் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிகழ்ச்சி தொடங்கி தற்போது 5 வாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரையிலும் ஜிபி முத்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரின ஆகியோர்கள் வெளியாகி உள்ளார்கள்.

இந்நிலையில் தற்பொழுது ஏகப்பட்ட சர்ச்சைகளில் தனலட்சுமி சிக்கி இருக்கிறார். அதாவது இந்நிகழ்ச்சியில் தனலட்சுமி கூறியதாவது தனக்கு அப்பா இல்லை என்றும் அம்மா மட்டும் தான். நாங்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறோம் தற்பொழுது கூட நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக என் அம்மா நகைகளை அடகு வைத்து எனக்கு தேவையான டிரஸ்களை வாங்கி தந்தார் என கூறினார்.

இந்நிலையில் தனலட்சுமி நண்பர்கள் அளித்துள்ள பேட்டியில் தனலட்சுமி இரண்டு படம் நடித்திருக்கிறார் இரண்டு படமும் இன்னும் வெளியாகவில்லை ஒரு படத்தின் ப்ரோமோஷன்காக தான் அவள் அவார்ட் ஈவண்ட்டை நடத்தி இருந்தார். இந்நிகழ்ச்சியை நடத்தியதே அவள் தான். காசு இல்லாமையா அவள் அந்த நிகழ்ச்சியை நடத்துவாள் நிகழ்ச்சியில் அவள் நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடன் வாங்கி துணி வாங்கினேன் என்று சொல்வதெல்லாம் பொய்.

அவருக்கு அப்பா இருக்கிறார் அவர் மெக்கானிக்கல் ஷாப் நடத்தி வருகிறார் அவருடன் சேர்ந்த எல்லாம் அவள் வீடியோ போட்டு இருக்கார் அம்மா துணிக்கடையை நடத்தி வருகிறார் அது மட்டும் இல்லாமல் பைனான்ஸ் செய்கிறார் சொல்ல போனால் அவள் நடித்த இரண்டு படங்களையும் எடுத்தது அவர்கள்தான். அந்த அளவிற்கு அவர்களிடம் பணம் இருக்கிறது.

MIM விளம்பரம் மூலம் பல பேரை ஏமாற்றி சம்பாதித்து இருக்கிறார் செருப்பு மட்டுமே 12,000 க்கு எடுப்பாள் எனவே பணம் இல்லை என்று சொல்வதெல்லாம் பொய் எனகூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்கள். இப்படிப்பட்ட நிலையில் தனலட்சுமியின் அம்மா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தனலட்சுமி குறித்து அவரது நண்பர்கள் சொல்லும் அனைத்தும் பொய் காசு கொடுத்து எல்லாம் நாங்கள் பிக்பாஸ்க்கு அவளை அனுப்பவில்லை அதேபோல குரு பகவான் சாரீஸ் கடை எங்களுடையது கிடையாது அதில் ஒரு ப்ரோமோஷன்காக தான் அப்படி செய்தோம் நாங்கள் ஒன்றும் லட்சக்கணக்கு பணம் வைத்திருக்கவில்லை எங்களுக்கு 80 லட்சம் கடன் இருக்கிறது என கூறியுள்ளார்.