விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் தற்போது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல எதிர்பார்ப்புகளுடன் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் மாசாக இருந்து வருகிறது. அதாவது தற்பொழுது வரையிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் சர்ச்சைக்குரிய பிரபலங்களை தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.
அந்த வகையில் 20 போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ள நிலையில் 40 நாட்களில் நடக்கக்கூடிய அனைத்து சண்டை சச்சரவுகளும் நான்கு நாட்களில் நடந்து வருகிறது மேலும் கடுமையான போட்டிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது புதிதாக மைனா நந்தினி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
மேலும் விவரத் தொடர்ந்து இன்னும் சில பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் இணைய உள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியின் முதல் தலைவராக ஜிபி முத்து வெற்றி பெற்றிருக்கிறார் பெரும்பாலும் ஜிபி முத்து தான் இந்நிகழ்ச்சியின் வெற்றி பெறுவார் எனக் கூறிவரும் நிலையில் ரசிகர்களுக்கு ஜிபி முத்துவை மிகவும் பிடித்திருக்கிறது.
அந்த வகையில் இவர் தலைவராக வெற்றி பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சிய ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இன்று முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில் இந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்று உள்ளது மேலும் அதிகமாக ஆயிஷா, சாந்தி, ரட்சிதா போன்றவர் நாமினேட்டாகி இருக்கிறார்கள்.
இந்த ப்ரோமோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரக்ஷிதாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இமேஜ் இருந்து வருகிறது இதன் காரணமாக இவர் இந்த வீட்டை விட்டு விரைவில் செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.