அனைவரையும் மகிழ்ச்சி படுத்துவதற்காக வித்யாசமான கெட்டப்பில் கலக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.! வைரலாகும் ப்ரோமோ..

bigg-boss
bigg-boss

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணி தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவி தொடர்ந்து வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் நிலையில் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி 60 நாட்களை நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து வாரம் வாரம் ஏராளமான டாஸ்க்கள் நடைபெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் கடுமையாக விளையாடி வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் இவர்களுக்கிடையே நாள்தோறும் எதாவது சர்ச்சைக்குரிய சண்டைகள் நடைபெற்று வரும் நிலையில் 21வது போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியை தற்பொழுது 14 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது முறையாக மணிகண்டா தலைவர் போட்டியில் இந்த வாரம் வெற்றி பெற்ற உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக முறை தலைவர் பதவியை வெற்றி பெற்றவர் இவர்தான் மேலும் இந்த வாரம் ஆயிஷா, ஜனனி, ராம், அசிம், ஏடிகே, கதிரவன் ஆகியோர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் இந்த வாரம் இருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கமலஹாசன் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் டாஸ்க்களுக்காக போட்டியாளர்கள் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் தயாராகி உள்ளார்கள் போட்டியாளர்கள் அந்தந்த கதாபாத்திரம் போல வேடம் அணிந்து இந்த வாரம் முழுவதும் இருக்க வேண்டும் அவர்களில் வித்தியாசமாகவும் மற்ற ஹவுஸ் மேட்ஸ்களை கவரும் போட்டியாளர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலைகள் தற்பொழுது அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் அதில் அனைத்து போட்டியாளர்களும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கடந்த வாரம் குயின்சி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது.