ஒரு நாளைக்கு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவ்வளவு சம்பளமா.? அட நம்ம தலைவன் ஜிபி முத்துக்கும் இவ்வளவா…?

bigg-boss6
bigg-boss6

விஜய் தொலைக்காட்சி கடந்த ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு வரும் நிலையில் தற்போது ஆறாவது சீசனை துவங்கியிருக்கிறது. அதாவது கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் பிக் பாஸ்சீசன் 6 வது நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் இந்நிகழ்ச்சியை கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

மேலும் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு 20 போட்டியாளர்களை களம் இறக்கி இருந்தார்கள். தற்பொழுது வைல்ட் கார்டு என்ட்ரியாக  மைனா நந்தினி 21 வது போட்டியாளராக அறிமுகமாகி இருக்கிறார். மேலும் இந்நிகழ்ச்சியில் அதிக போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் ஏராளமான சண்டை சச்சரவுகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் விஜய் டிவி தொகுப்பாளினி மகேஸ்வரி எலிமினேட்டாக அதிக வாய்ப்பு இருக்கிறது இதனைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசன் மற்றும் ஜி பி முத்து இவர்களுடைய காம்போ மிகவும் நன்றாக இருக்கிறது அதோட மட்டுமல்லாமல் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியின் முதல் தலைவராக ஜிபி முத்து வெற்றி பெற்று இருக்கிறார்.

இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சீசன்கள் டிஆர்பியில் பெரிதும் அடிவாங்கிய நிலையில் ஆறாவது சீசன் நல்ல வரவேற்பினை பெற வேண்டும் என்பதற்காக சர்ச்சை கூறிய பிரபலங்களை நிகழ்ச்சியில் களம் இறக்கி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து பல பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் பற்றிய விவரம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது அந்த வகையில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசன் முதல் கடைசியாக வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த மைனா நந்தினி வரை  அனைவரின் ஒரு நாள் சம்பளம் பற்றிய தகவலை தற்பொழுது பார்க்கலாம்.

அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமலஹாசன் ரூபாய் 75 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.

1.தனலட்சுமி – ரூபாய் 11 முதல் 20 ஆயிரம் வரை, 2.நிவா – ரூபாய் 12 முதல் 18 ஆயிரம் வரை, 3.குயின்சி – ரூபாய் 15 முதல் 20 ஆயிரம், 4.விஜே கதிரவன் – ரூபாய் 18 முதல் 22 ஆயிரம், 5.மகேஸ்வரி – ரூபாய் 18 முதல் 23 ஆயிரம்., 6.அமுதவாணன் – ரூபாய் 23 முதல் 27 ஆயிரம்., 7.விக்ரமன் – ரூபாய் 15 முதல் 17 ஆயிரம்., 8.சாந்தி – ரூபாய் 21 முதல் 26 ஆயிரம்., 9.ஜனனி – ரூபாய் 21 முதல் 26 ஆயிரம்., 10.ADK – ரூபாய் 16 முதல் 19 ஆயிரம்., 11.ராம் ராமசாமி – ரூபாய் 12 முதல் 15 ஆயிரம்., 12.ரட்சிதா மகாலட்சுமி – ரூபாய் 25 முதல் 28 ஆயிரம்., 13.மணிகண்டன் – ரூபாய் 18 முதல் 24,000., 14.செரினா – ரூபாய் 23 முதல் 25 ஆயிரம்., 15.ஆயிஷா – ரூபாய் 28 முதல் 30 ஆயிரம்., 16.ராபர்ட் மாஸ்டர் – ரூபாய் 25 முதல் 27 ஆயிரம்., 17.அசிம் – ரூபாய் 22 முதல் 25 ஆயிரம்., 18.ஷிவின் – ரூபாய் 20 முதல் 25 ஆயிரம்., 19.அசல் கோளாறு – ரூபாய் 15 முதல் 17 ஆயிரம்., 20.ஜிபி முத்து – ரூபாய் 15 முதல் 18 ஆயிரம்.,  21.மைனா நந்தினி – ரூபாய் 20 முதல் 25 ஆயிரம்.