பொதுவாக விஜய் டிவி ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசனும் கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது.
முந்திய சீசன் கடை விட இந்த சீசனில் மிகவும் சுவாரசியமாக இருந்து வருகிறது 21 போட்டியாளர்களுடன் களம் இறங்கிய இந்த நிகழ்ச்சி தற்பொழுது gp முத்து மற்றும் சாந்தி இருவரும் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் 19 நபர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் விரைவில் இந்நிகழ்ச்சியில் சில முக்கிய நடிகர்கள் பங்கு பெற இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
சண்டை சச்சரவு என இருந்து வரும் இந்நிகழ்ச்சியில் தற்பொழுது தீபாவளியை மிகவும் கோலாகலமாக போட்டியாளர்கள் ஒன்றிணைந்து கொண்டாடி இருக்கிறார்கள். அது குறித்த ப்ரோமோ தற்பொழுது வெளியாகி இருக்கிறது அதாவது முதல் ப்ரோமோவில் இன்று போட்டியாளர்கள் நாமினேஷன் பற்றிய காட்சிகள் இடம் பெற்று இருந்தது.
இரண்டாவது பிரம்மாவின் தீபாவளி முன்னிட்டு அவர்கள் வைக்கப்பட்டுள்ள சிறப்பான டாஸ்க் தான் இடம் பெற்று இருக்கிறது இந்நிகழ்ச்சியை மைனா மற்றும் அமுதவாணன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்கள். அதில் மைனா சில கேள்விகளை போட்டியாளர்களிடம் முதலில் கேட்கிறார் அதன்பிறகு பாசிட்டிவான கேள்விகள் இருந்தாலும் சில நெகட்டிவ் கேள்விகளும் இருக்கின்றது.
பிக்பாஸ் வீட்டில் கொளுத்தி போடும் போட்டியாளர் யார் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ள நிலையில் இதை வைத்து பெரிய பிரச்சனை உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது மற்ற நாட்களில் தான் சண்டை போடுகிறார்கள் என்று பார்த்தால் தற்பொழுது தீபாவளி கொண்டாட்டத்தின் பொழுதும் இவ்வாறு சண்டை போட்டு கொள்க போகிறார்கள்.