பிக் பாஸில் இருக்கும் யுகேந்திரன் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா.? வாய்ப்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு..

bigg boss 7
bigg boss 7

Bigg Boss Contestant Yogendran Net worth: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்று இருக்கும் யுகேந்திரனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்து இருக்கிறது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 16 போட்டியாளர்கள் மட்டுமே பங்கு பெற்று வருகின்றனர். அதாவது இந்த சீசனில் முதன்முறையாக முதல் வாரம் எலிமினேஷன் நடைபெற்றது அப்படி பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் போட்டியாளராக அனன்யா வெளியேறினார்.

இவரை அடுத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திடீரென பவா செல்லதுரை வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் கடுப்பினை ஏற்படுத்தியது. அதாவது இதற்கு முன்பே பவா சொல்லதுரை வெளியேறி இருந்தால் அனன்யா இருந்திருப்பார் என கூறினார். தற்போது 16 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அப்படி இந்த சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக் கொண்டவர் தான் பிரபல முன்னணி பாடகர் மலேசியா வாசு தேவனின் மகனான யுகேந்திரன். இவர் சினிமாவில் நடிகராகவும், பாடகராகவும் பல படங்களில் பணியாற்றிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் இருந்து விலகி நியூசிலாந்தில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.

நியூசிலாந்தில் தொழில் செய்து வரும் யுகேந்திரன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த சீசனில்  இருக்கும் போட்டியாளர்களில் விசித்ராவிற்கு பிறகு யுகேந்திரன் தான் வயதானவர் என்பதால் இவரால் டாஸ்க் செய்ய முடியாது என போட்டியாளர்கள் கூறி வந்தனர். ஆனால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று நடைபெற்ற டாஸ்கில் வெற்றி பெற்றார்.

இவ்வாறு பிக் பாஸில் போட்டியாளராக பங்கு பெற்று வரும் யுகேந்திரன் ரூ. 20 கோடிக்கும் மேல் சொத்துக்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இவருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 27 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.