ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பி யில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக புது புது ரியாலிட்டி ஷோக்கள் சீரியல்கள் என ஒலிபரப்பி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வந்தது அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிளும் யாராவது ஒரு பிரபலம் மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் ஆறாவது சீசன் கோலாகாலமாக தொடங்கப்பட்டுள்ளது அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 36 நாட்கள் கடந்து மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சற்றும் யாரும் எதிர்பார்க்காத ஜி பி முத்து கலந்து கொண்டது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை கொடுத்தது ஏனென்றால் ஜி பி முத்து இருந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாக செல்லும் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால் ஜி பி முத்து திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்று விட்டார் அவர் தற்பொழுது பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணிகண்டன் சமீபத்தில் ப்ளூடூத் பயன்படுத்துவதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது அது மட்டும் இல்லாமல் இணையதளத்தில் கடும் விவாதங்களும் நடந்து கொண்டிருக்கிறது என்னதான் போட்டியாளர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் சிலர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள மணிகண்டன் விதியை மீறி இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது இந்த ப்ரோமோ வீடியோவில் நிவாஸினியும் மைனாவும் ப்ளூடூத் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பொழுது மைனா திடீரென நானும் மணியும் ப்ளூடூத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தோம் மணிகண்டன் அணிந்திருந்த ஷூவில் ப்ளூடூத் இருக்கிறது என நினைத்து பிக் பாஸ் அணியினர் ஷூ வை பரிசோதிக்க எடுத்துக் சென்றுள்ளார்கள் என இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் மணிகண்டன் உண்மையாலும் விதியை மீறி உள்ளாரா? அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் ப்ளூடூத் பயன்படுத்தி உள்ளாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Bigg Boss took away Manikanta's shoe after he revealed it has Bluetooth connectivity.
#BiggBossTamil6 pic.twitter.com/WJNlSpedTl
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 15, 2022