வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை.. பார்த்து பிரமித்துப்போன பிக்பாஸ் பிரபலம்..!

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் இவர் அண்மைக்காலமாக சூப்பரான ஆக்சன் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அதன் காரணமாக ஒவ்வொரு படமும் குறைந்தது 200 கோடி வசூல் செய்து விடுகின்றன அந்த வகையில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது அவர் நடித்துவரும் திரைப்படம் தான் வாரிசு.

இந்த படம் விஜய்க்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் கதையாக உருவாகிறதாம் அதே சமயம் இந்த படத்தில் காமெடி ஆக்சன் ஆகியவை அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ஜெயசுதா, குஷ்பூ, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

வாரிசு படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது அதன் காரணமாக படபிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகி உள்ளன அதனால் விஜய் ரசிகர்கள் அடுத்தடுத்த அப்டேட்டை நோக்கி எதிர்பார்த்த காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. மாடல் அழகியும், பிக்பாஸ் பிரபலமும் ஆன சம்யுக்தா அண்மைக்காலமாக படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரும் இந்த படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது சமீபத்தில் அவர் விஜய் குறித்து பேசி உள்ளார்.

samyuktha
samyuktha

விஜய் எல்லோரிடமும் பிரண்ட்லியாக பேசுவார் தவறாமல் எல்லோருக்கும் ஹாய் சொல்லுவார் அவர் பெரிய ஸ்டார் என்பது போல காட்டிக் கொள்ள மாட்டார் எப்பொழுதும் சகஜமாக ஒரு மூலையில் அமர்ந்திருப்பார் மேலும் அவர் குடையை அவரே பிடித்திருப்பார் என்றும் ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.