விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிக்க விரும்பிய பிக்பாஸ் பிரபலம்.! எவ்வளவு முயற்சித்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை என வருத்தம்..

pantiyan stores
pantiyan stores

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக பணம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் நடித்து வரும் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஏனென்றால் கூட்டு குடும்பம் என்பதை மறந்து அனைவரும் வாழ்ந்து வருகிறோம் எனவே பழைய நினைவுகளை அனைவருக்கும் ஞாபகம் படுத்தும் வகையில் கூட்டு குடும்ப கதையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது இதனால் எப்படி எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் எப்படி எல்லாம் பிரச்சனை வரும் என அனைத்தையும் தத்ரூபமாக காண்பித்து வருகிறார்கள்.

இந்த சீரியலில் கதிர் மற்றும் ஜீவா என இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிக்க முயற்சி செய்துள்ளார் பிக் பாஸ் போட்டியாளர் டைட்டில் வின்னர். இந்த சீரியலில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் வருத்தத்தில் இருந்தார் இப்படிப்பட்ட நேரத்தில் தான் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர் தான் நடிகர் ராஜூ ஜெயமோகன்.இவர் முதலில் கதிர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு சென்றுள்ளார் அதன் பிறகு ஜீவா கதாபாத்திரத்திற்கும் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார.

இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக இதில் ராஜு நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என பலரும் கமெண்ட் செய்து வரும் நிலையில் அதில் அனைத்து ரசிகர்களும் ராஜு நடித்திருந்தால் கச்சிதமாக இருக்கும் என கூறி வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்க பிறகு ராஜு தொடர்ந்து சீரியல் மற்றும் திரைப்படங்களின் வாய்ப்புகளை பெற்று வருகிறார். மேலும் கடைசியாக இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி கதாபாத்திரத்தில் நடித்த வந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.