ப்ரோமோஷனுக்காக மட்டும் ரூபாய் 2.5 லட்சம் கொடுத்துள்ளேன் எனக் கூறிய பிக்பாஸ் பிரபலம்.! ஷாக்கான ரசிகர்கள்..

விஜய் டிவியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றவரும் பிரபலம் ஒருவர் பிரமோஷனுக்காக மட்டும் ரூபாய் 2.5 லட்சம் செலவழித்து உள்ளதாக தெரிவித்துள்ளார் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் வாயைப் பிளந்து வருகிறார்கள்.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 19 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக சாந்தி வெளியேறினார். பிறகு ஜி பி முத்து தன்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக வெளியேறிவிட்டார்

இவரைத் தொடர்ந்து தற்போது இந்த வாரம் அசல் கோளாறு வெளியாகி உள்ள நிலையில் அசீம் ரெட் கார்டு கொடுத்து வெளிய அனுப்பப்படுவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. இவ்வாறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று வரும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தங்களை பாப்புலர் ஆக்குவதற்காக பணம் கொடுத்து தங்களைப் பற்றி ப்ரோமோஷன் செய்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் இது குறித்து எவரும் எந்த ஒரு கருத்தும் முன் வைக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று வரும் ராம் தான் ப்ரோமோஷன்காக ரூபாய் 2.5 லட்சம் செலவழித்துள்ளதாக சக போட்டியாளர்களிடம் கூறி வருகிறார்.

இந்த தகவல் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் மேலும் குயின்சியுடன் பேசி வரும்பொழுது இதை தெரிவித்து இருக்கிறார் மேலும் ஏற்கனவே நிறைய பேருக்கு ப்ரோமோஷன் செய்தவர்களிடம் தான் பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வாறு இவர் கூறுவதைப் பார்க்கும் பொழுது முந்தைய சீசன் போட்டியாளர்கள் பலரும் இவ்வாறு செய்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.