சன்னி லியோனை தெரியாதுன்னு சொன்ன பிக்பாஸ் பிரபலம்..! இசை வெளியீட்டு விழாவில் கலகலப்பான பேச்சு..

sunny-leone-
sunny-leone-

சன்னி லியோன் முதலில் அந்த மாதிரியான படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் இவர் இந்தியில் டாப் ஹீரோக்களின் படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார்.சமயத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியதால். இதனால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்தது.

மேலும் ஹிந்தியையும் தாண்டி பிற மொழிகளில் வாய்ப்புகள் கிடைத்தது குறிப்பாக இப்பொழுது தென்னிந்திய சினிமா உலகில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் அதிலேயும் தமிழில் இவர் தொடர்ந்து வீரமாதேவி, ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதில் முதலாவதாக ஓ மை கோஸ்ட் திரைப்படம் வெளிவர இருக்கிறது.

இந்தப் படத்தில் சன்னி லியோன், சதீஷ், மொட்ட ராஜேந்திரன் , தர்ஷா குப்தா, யோகி பாபு, பிக் பாஸ் ஜி பி முத்து மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மேலும் ரசிகர்களும் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்  சன்னி லியோன் குறித்து ஜி பி முத்து  பேசி  உள்ளார்.

இது என்னுடைய முதல் படம் இந்த படத்தில் நடிக்க முதலில் பயந்தேன் ஆனால் இயக்குனர் பயப்படாதீங்க கொடுக்குறதை மட்டும் நடிங்க சொன்னாரு.. ரொம்ப சந்தோஷமா நடிச்சிருக்கேன் என கூறினார் மேலும் பேசிய அவர்  இந்த படத்துல சன்னி லியோன் நடிக்கிறாங்கன்னு சொன்னாங்க..

சன்னிலியோன்னா எனக்கு யாருன்னு தெரியாது.. ஆனா நிறைய கமெண்ட்ஸ் வரும் உண்மையா எனக்கு சன்னி லியோன் தெரியவே தெரியாது. அப்புறம் சன்னி லியோன் புகைப்படத்தை காமிச்சாங்க அப்ப தான் பார்த்தேன் நல்ல அழகாக இருக்கிறார் எனக்கூறி கலகலப்பாக ஜீ பி முத்து பேசினார்..