சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் தாமரை.! எந்த தொலைக்காட்சியில் தெரியுமா.?

dhamarai

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தமிழன் நாட்டையும் தாண்டி ஏராளமான பகுதிகளில் மிகப்பெரிய வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். இவ்வாறு மக்கள் மத்தியில் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் ஏராளமான பிரபலங்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.

இவ்வாறு வாய்ப்பு கிடைக்காமல் திணறிவரும் ஏராளமான திறமை இருப்பவர்களை இந்நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்து பிறகு அவர்களுக்கென ஒரு இடத்தை விஜய் டிவி உருவாக்கி தருகிறது. அப்படி அடிமட்டத்திலிருந்து வந்து தற்பொழுது ஏராளமான மக்களின் மனதை வென்றிருப்பவர் தான் தாமரை.

கூத்தாடி தனது அம்மா மற்றும் குடும்பத்தினர்களை பார்த்துக் கொண்ட தாமரை பல இடங்களுக்கு சென்று கூத்தாடி வந்துள்ளார். இதனால் தாமரையிடம் சொந்தகாரர்கள் கூட பேச மறுத்து இருப்பதாக அவர் கூறியிருந்தார் இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் இவருடைய வாழ்க்கையே மாறியது.

அந்த வகையில் திரைப்படங்கள் மற்றும் சில சீரியல்களின் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வரும் நிலையில் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு சீரியல்களின் நடிக்கவில்லை ஆனால் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் தாமரை யூடியூப் சேனல் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கும் நிலையில் அதில் தொடர்ந்து ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

zee tamil 1
zee tamil 1

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தாமரை நடிக்கப் போகும் புதிய சீரியல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தற்பொழுது ஜீ தமிழில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் புதிதாக கமிட் ஆகியிருக்கிறார். ஆனால் எந்த கதாபாத்திரம் என்று தெரியாமல் இருந்து வரும் நிலையில் இவர் நடிக்கும் எபிசோடுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.