சன் டிவியின் டாப் 2 சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் மதுமிதா.!

mathumita

ஏராளமான பிரபலங்கள் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் சீரியலில் நடித்து வருபவர்களும் இருக்கின்றனர் அந்த வகையில் திரைப்படங்களின் மூலம் பிரபலமாகி தற்பொழுது சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருப்பவர் தான் நடிகை மதுமிதா. இவர் ஜீவா நடிப்பில் வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துடன் இணைந்து செய்த காமெடி காட்சிகள் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.

இதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரீச் கிடைத்தது அப்படி அந்த படத்திலிருந்து இவரை ஜாங்கிரி மதுமிதா என்று அழைத்து வருகிறார்கள். தொடர்ந்து திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த மதுமிதா ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிகள் கலந்துக் கொண்டு பல வேதனைகளை அனுபவித்தார்.

எனவே தொடர்ந்து சக போட்டியாளர்களுடன் இவருக்கு சண்டை ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியில் இருக்கும் பொழுதே கையை அறுத்துக் கொண்டது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே இதற்கு மேல் இந்த நிகழ்ச்சியில் இருக்க முடியாது என அடம் பிடித்து நிகழ்ச்சியில் இருந்து விலகினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு குழந்தை பெற்ற மதுமிதா சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 2வது டாப் சீரியலாக இருந்து வரும் சன் டிவியின் இனியா சீரியலில் இணைந்து இருக்கிறார். தற்பொழுது ஷூட்டிங்கில் மதுமிதா இருந்து வரும் நிலையில் இந்த சீரியலில் போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது விரைவில் அவர் நடித்திருக்கும் எபிசோடுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

eniya
eniya

தற்பொழுது இனியா சீரியல் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மக்கள் கயல் சீரியலுக்குப் பிறகு இனியா சீரியலை அதிகளவில் பார்த்து வருகின்றனர் எனவே இனியா சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.