தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பார் அஜித் குமார். இவர் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை இயக்குனர் ஹச். வினோத்துடன் கைக்கோர்த்து துணிவு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி உள்ளதாம்.
அதனால் இந்த படத்தில் ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் என தெரிய வருகிறது துணிவு திரைப்படத்தில் அஜித் உடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன்..
மற்றும் பிக்பாஸ் நட்சத்திரங்களான சிபி, அமீர், பாவனி போன்றவர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர் மேலும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது அதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்திழுக்க அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுக்கப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.
இதுவரை இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகி உள்ளது. வெகு விரைவிலேயே இந்த படத்தின் டிரைலர், டீசர் மற்றும் முதல் சிங்கள் பாடல் போன்றவை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து பிக்பாஸ் பிரபலம் சிபி நடித்து உள்ளார்.
அதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில் சிபி நடிகர் அஜித்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளி வீசி அசதி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..