‘லியோ’ படத்தில் நடிப்பது குறித்து விளக்கம் அளித்த பிக்பாஸ் பிரபலம் அபிராமி.!

leo
leo

லியோ திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் அபிராமி நடித்திருப்பதாக கூறிய தகவல் வெளியான நிலையில் அது குறித்து தற்பொழுது நடிகை அபிராமி விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் லியோ பட குழு சென்னை திரும்பியது. மேலும் காஷ்மீரில் கடும் குளிர், நிலநடுக்கம் என பல சிரமங்களுக்கு நடுவே வெற்றிகரமாக முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

எனவே இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக பட குழுவினர்கள் தயாராகி வரும் நிலையில் இந்த படப்பிடிப்பு சென்னையில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வரும் நிலையில் இவரை தொடர்ந்து நடிகர்கள் சஞ்சய் தத், கௌதம் மேனன், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட இன்னும் பலரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இதனை அடுத்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர் பொதுவாக லோகேஷ் கனகராஜ் ஆக்சன் நிறைந்த படங்களை இயக்கி வரும் நிலையில் கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை லியோ படம் நிறைவு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் காஷ்மீரில் இந்த படப்பிடிப்பின் பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர்களுடன் பிக்பாஸ் பிரபலம் அபிராமி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது எனவே இவர் லியோ திரைப்படத்தில் நடித்து வருவதாக ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார் அபிராமி.

அதாவது சமீப பேட்டியில் கலந்துக் கொண்ட அபிராமி நான் லியோ திரைப்படத்தில் நடிக்கவில்லை காஷ்மீருக்கு வேறு ஒரு படப்பிடிப்பிற்காக சென்ற பொழுது லோகேஷ் கனகராஜ் மற்றும் மற்ற நடிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறியிருக்கிறார் எனவே இதனால் லியோ திரைப்படத்தில் அபிராமி நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.