“துணிவு” படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலங்கள்..? அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அமீர், பாவனி மற்றும் சிபி…

thunivu
thunivu

நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் வலிமை திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இவர் நடித்த ஒரு திரைப்படம் துணிவு இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

அதனால் இந்த படத்தில் ஆக்சன், சென்டிமென்ட் போன்றவை அதிகம் இருக்கும் என தெரிய வருகிறது அதே சமயம் இந்த படத்தில் சமூக அக்கறை உள்ள சில விஷயங்களை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தை இயக்குனர் வினோத்  வேற லெவலில் எடுத்திருக்கிறார் அண்மையில் கூட ஹச். வினோத் இந்த படம் மிக தரமாக உருவாகி உள்ளது.

அனைவரையும் கவர்ந்திழுக்கும் என சொல்லியிருந்தார் இதனால் இந்த படத்தை பெரிய அளவில் மக்கள் மன்றம் ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர் இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மகாநதி சங்கர், ஜி எம் சுந்தர், சமுத்திரகனி, மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, யோகி பாபு, ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு பாங்காங் சென்று இருக்கிறது. அங்கு ஆக்சன் காட்சிகள் தான் தீவிரமாக எடுத்து வருவதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் துணிவு படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பல நடிக்கின்றனர்.

அதை உறுதிப்படுத்தும் வகையில்  நடிகர் அஜித்துடன் அமீர், ,பாவனி மற்றும் சிபி ஆகியவர்களுடன் இணைந்து  புகைப்படம் எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் போட்டோ எனக் கூறி லைக்குகளையும், கமெண்ட்களையும் கொடுத்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

thunivu
thunivu