வாரிசு இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கும் பிக்பாஸ் பிரபலம்.! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிபோடும்..

vijay

விஜய் நடிப்பில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தை தோழா படத்தின் இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். படம் குடும்ப செண்டிமெண்ட் ஆக்சன் காமெடி போன்ற அனைத்தும் கலந்த ஒரு படமாக உருவாகி வருகிறது. வாரிசு படத்தில் ஹீரோயின் ஆக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்

இவர் விஜய் உடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இந்த படத்தில் பல முக்கிய நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது அதனால் பட ப்ரமோஷன்கள் கூடிய விரைவில் தொடங்க உள்ளது. அண்மையில் கூட தளபதி விஜய் பனையூரில் அவரது ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார்

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. மேலும் பொங்கலுக்கு வாரிசை எதிர்த்து அஜித்தின் துணிவு படமும் மோத உள்ளதால் போட்டிகள் கடுமையாக இருக்கும். அதனால் விஜய் அவரது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது போன்றவற்றை செய்து வருகிறார்.

இந்த நிலையில் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு உதயநிதியை சந்தித்து வாரிசு படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்குவது குறித்து பேசி உள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் சில முக்கிய இடங்களின் வாரிசு வெளியீட்டு உரிமையை உதயநிதி பெற்றுள்ளார். வாரிசு வெளியிட்டுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் பிக் பாஸ் 5 டைட்டில் வின்னரான ராஜூ ஜெயமோகன் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அவர் கூறியது வாரிசு பட இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது அதை நான் தான் தொகுத்து வழங்க உள்ளேன் என மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.

raju
raju