பிக் பாஸ் எட்டாவது சீசன் இரண்டாவது வாரத்தை அடி எடுத்து வைத்து நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் கேப்டன் பதவிக்காக மூன்று போட்டியாளர்கள் அடித்துக் கொள்கிறார்கள். அப்பொழுது முத்து இந்த டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்து ஆனந்தியை விட நான் பெட்டர் என்று நினைக்கிறேன் என கூறுகிறார்.
அதனால் கேப்டன் பதவி எனக்கு தான் கொடுக்க வேண்டும் எனவும் அழுத்தம் திருத்தமாக தன்னுடைய வாய் திறமையால் பேசுகிறார். அதேபோல் மேலும் விஷால் பற்றி பேசிய முத்து ஷோவுக்கு பின்னாடி நான் விஷால் கூட ஒர்க் பண்ணி இருக்கேன் அவனைவிட ஒரு படி நான் மேல தான் இருக்கேன் அதனால கண்டிப்பா கேப்டன் பதவி எனக்கு தான் என பேசுகிறார்.
அதேபோல் விஷால் பேசிய பொழுது நான் விஜேவா இருந்தபொழுது என்னோட பெஸ்ட் கொடுத்து இருக்கேன் அதனால எனக்கு தான் இந்த ஃபர்ஸ்ட் பொசிஷன் கொடுக்க வேண்டும் என கூறுகிறார். அடுத்ததாக பேசிய ஆனந்தி ரெண்டு பேரை விட நான் தான் பெஸ்ட் ஒரு சிஇஓ ஆக நான் நிறைய எபோர்ட் போட்டு இருக்கேன் அதனால் எனக்கு தான் என அவரும் கூறுகிறார்.
ஆனாலும் முத்து விடுவது போல் தெரியவில்லை அவங்க சிஇஓ ஆவதற்கு எப்படி எக்ஸ்ட்ரா எஃபெக்ட் போட்டாங்களோ அதே மாதிரி தான் நானும் என கூறுகிறார் ஒரு வழியாக முத்து தன்னுடைய வாதத்தால் அனைவரையும் தாக்குகிறார்.
முத்து பேசியதை பார்த்த நெட்டிசன்கள் முத்துக்குமரனின் பேச்சு ஒன்றாகவும் செயல்பாடு ஒன்றாகவும் உள்ளது தன்னுடைய பேச்சு திறமையால் ஆண்கள் அணியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் அவர் தலைமையாகவும் மற்றவர் பொம்மையாகவும் செயல்படுகிறார்கள் எனக் கூறுகிறார்கள் நேட்டிசன்கள்.
அதேபோல் மேலும் ஒருவர் நல்லவனோ கெட்டவனோ அவனைப் பார்த்தாலே மொத்த கூட்டமும் கதறுது எனக் கூறியுள்ளார்.