முதன்முறையாக தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் ஆயிஷா.!

aayesha

சின்னத்திரை நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் அனைத்து நடிகைகளும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் ஆயிஷா. இவர் காதலர் தினத்தை முன்னிட்டு முதன் முறையாக தன்னுடைய காதலரின் முகத்தை தன்னுடைய ரசிகர்களுக்கு தெரிவித்துள்ள நிலையில் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆயிஷா தன்னுடைய காதலருக்கு ப்ரபோஸ் செய்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தான் கம்மிட்டானதை உறுதி செய்தார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து தன்னுடைய காதலரின் முகத்தை காட்டாமல் அவருடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு இருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய காதலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். நேற்று உலகெங்கும் காதலர் தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் தங்களுடைய காதலர் அறிமுகப்படுத்தினார்கள். மேலும் திருமணமான பிரபலங்கள் தங்களுடைய ஜோடிக்கு கவிதையின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

அதேபோல் நடிகை ஆயிஷாவும் காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய காதலருடன் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் இவருடைய காதலரின் பெயர் யோகேஷ் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

aayisha 1
aayisha 1

ஆயிஷா மற்றும் யோகேஷ் இருவரும் சிரித்து சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாக ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் இவர்களுடைய திருமணம் குறித்து விரைவில் தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

aayisha

ஆயிஷா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சத்யா சீரியலின் மூலம் தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இவர் ஏராளமான சீரியல்களில் நடித்திருந்தாலும் கூட இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று தந்தது.