பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. அதாவது நிகழ்ச்சியில் பங்குபெற்ற பாலாஜி நிகழ்ச்சியின் பொழுது மிகவும் கோபமாகவும் அடிப்பது போல் ஆக்ரோஷமாகவும் பேசி வந்ததால் ரெட் கார்டு கொடுத்து இவரை வெளியில் அனுப்பி விடுங்கள் என பலர் சமூக வலைதளங்களில் கூறி வந்தார்கள்.
இருந்தாலும் பாலாஜி நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தார்கள்.அந்த வகையில் behindwoods சார்பாக biggest sensation on reality television என்ற பட்டம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.
அதனைப் பெற்ற பாலாஜி மீண்டும் இவர் இந்த விருதை வாங்கும் பொழுது இரண்டு நிமிடம் பேசிய வீடியோவை இதுவரையிலும் Behindwoods தொலைக்காட்சி ஒளிபரப்பாத காரணத்தினால் இந்த விருதை மீண்டும் பாலாஜி திருப்பிக் கொடுத்து விட்டாராம்.
இதுகுறித்து அனிதா சம்பத் இதனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் பாலாஜி என்று தனது ஆதரவை கூறியிருந்தார். அதோடு இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் வரை பணம் கொடுத்து இவ்வாறு போட்டியாளர்களை இழிவாக பேச சொல்லும் மற்ற போட்டியாளர்கள் விரைவில் அவர்களின் முகமூடி கழல போகிறது என்று கூறியிருந்தார்.
ஒருசில போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் அவர்களுக்கு பிடிக்காதவர்களை விரைவில் வெளியேற வேண்டும் என்பதற்காக யூடியூப் சேனல்கள் இடம் 20,000 முதல் 30,000 வரை பணம் கொடுத்து அவர்களை பற்றி அவதூறாக பேசுவது அதனால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு என்று எடுக்கும் வாக்கு குறைய தொடங்கியது.
இதனை எல்லாத்தையும் தாண்டி தான் நான் 85 நாட்கள் உள்ளே இருந்தேன் இதனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியிருந்தார். இவ்வாறு பாலாஜியும் விருதை திரும்பி கொடுத்ததும், அனிதாவும் கூறியதும் behindwoods யூடியூப் சேனலையே.
இவ்வாறு பிக்பாஸ் ரிவ்யூ செய்து வந்த ரவீந்திரன் தன்னைப் பற்றி பலரும் தவறான செய்திகளைக் கூறி வந்ததால் அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார். அந்தவகையில் தமிழ்நாட்டில் எத்தனையோ துறையில் இருப்பவர்கள் மற்றும் முக்கியமாக விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் இந்த விருது அளிக்கப்படுவதை பார்த்து வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.
ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சம்பளம் வாங்கிக்கொண்டு 100 நாட்கள் மிகவும் சொகுசாக இருந்து விட்டு கடைசியாக சிங்க பெண்ணே என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு இது போன்ற விருதுகளை எல்லாம் வாங்குவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஒருவேளை behindwoods நிறுவனம் உங்களை தவறாக விமர்சித்து இருந்தால் மேடையில் அந்த விருதை வாங்கும் பொழுது அதை வேண்டாம் என்று கூறிவிட்டு வந்திருந்தால் அதை நான் கூட பாராட்டி இருப்பேன் பாலாஜி.
உண்மையாலுமே இந்த விருதை தனது சொந்த உழைப்பினால் திறமையினாலும் உயர்ந்தவர்களுக்கு இதனை வழங்கி இருக்க வேண்டும் உதாரணமாக புகழ், சிவாங்கி, அஸ்வின், பாலா, சரத் இவர்களை சொல்லமுடியும் இதற்கு மேல் என்னை சீண்டினாள் கொரோனா பிரச்சனை எல்லாம் முடியட்டும் நாம் இருவரும் நேருக்கு நேர் அமர்ந்து பேசலாம் என்று பாலாஜிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதோடு தவறா செய்திகளை எப்பொழுதும் சொல்லக்கூடாது. சுரேஷ் மற்றும் வேல்முருகன் பணத்தை வாங்கிக் கொண்டு மற்றவர்களை தவறாக பேசுவதாக சொன்னதாக பொய்யான கருத்தை சொல்லக்கூடாது. மேலும் நீங்கள் பிக்பாஸ் வீட்டில் 85 நாட்கள் இருந்தது பெருமையாக உள்ளது என்று கூறியிருந்தீர்கள்.
ஆனால் உண்மையில் நீங்கள் ஆரியை பார்த்து பேசாதீங்க ஆரி என்று எப்பொழுது சொன்னீர்களோ அன்று ரசிகர்கள் உங்களை இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற முடிவு செய்து அனுப்பி விட்டார்கள். இன்னமும் இந்த நிகழ்ச்சியில் ஆரி வெற்றி பெற்றது உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று அனித்தாவிற்க்கு கூறியுள்ளார்.