அபிஷேக்கின் முன்னால் மனைவி பிரிவு குறித்து அதிர்ச்சி தகவல்.! புகார் எடுப்பாங்களா.!

abishek-raja

கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டுட்டுள்ளது.  அதோடு 4 சீசன்களை விடவும் இந்த சீசன் வீடு மிகவும் பிரமாண்டமாக அமைந்துள்ளது அதோடு இந்த முறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்நிகழ்ச்சி ஆரம்பித்து இன்றுடன் 8 நாட்கள் கடந்த நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தங்களது வாழ்வின் நடந்த பல தகவல்களை கூறிவருகிறார்கள்.  அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டில் தனது வாழ்வில் நடந்த ஏராளமானவற்றை கூறிவருகிறார்.

அதோடு மிகவும் என்டர்டைன்மென்டான இவர் இந்நிகழ்ச்சியின் இரண்டாவது நாளே அனைவரின் முகத்தையும் பார்த்து நான் ஜோசியம் சொல்கிறேன் என்று கூறி அனைவர்களின் கேரக்டர்களையும் நகைச்சுவையாக கூறி சிரிக்க வைத்தார். இவ்வாறு மிகவும் நகைச்சுவையாக இருந்து வந்த இவர் திடீரென்று தன்னுடைய அம்மா சென்டிமென்ட் கதைகளை சொல்ல ஆரம்பித்து அதனை கேட்ட பலரும்  அழுதார்கள்.

அதோடு அபிஷேக் ராஜாவிற்கு விவாகரத்து ஆகிவிட்டது என்ற தகவல் பலரையும் ஆச்சரியம் அடைய செய்தது. இவருக்கு திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடைய முன்னாள் மனைவி தீபா நடராஜன் அவர்கள் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது நம் வாழ்வில் நடந்த மீள முடியாத துக்கம் சம்பவத்தில் இருந்து நம்மை நாமே கொண்டுவருவது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அப்படி ஒரு சில பேர் வேண்டும் என்றே நமது கடந்த காலத்தில் நடந்த ஏராளமானவற்றை தூண்டுவார்கள் இதனால் நமக்கு கஷ்டம் ஏற்படும்.  மேலும் நான் திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற வேண்டுமென்று மூன்று வருடங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டேன். இந்த முடிவை நான் என்னுடைய சுய சிந்தனையோடு தான் எடுத்தேன்.  இதனால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் எல்லாத்தையும் சிந்தித்து தான் இந்த முடிவை எடுத்தேன் இது எந்தன் சொந்த முடிவுதான்.

deepa natarajan 2
deepa natarajan 2

இப்படிப்பட்ட நிலையில் திருமணமான புதிதில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தேன் அந்த வீடியோ விவாகரத்தானதற்கு பிறகு தான் அதிகமாக வைரலாகி வருகிறது. எனவே தயவு செய்து அந்த வீடியோவை நீக்கி விடுங்கள் இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.  மேலும் தனது முன்னாள் கணவர் ஏதாவது பெரிய நிகழ்ச்சிக்கு சென்று அவரைப் பற்றி கூகுளில் தேடும் பொழுது அந்த வீடியோ தான் முதலில் நிற்கிறது என்றும் இது எனக்கு மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் தருகிறது அந்த வீடியோவை தயவுசெய்து நீக்கினால் நன்றாக இருக்கும் என்று கூறிவுள்ளார்.  இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

deepa natarajan
deepa natarajan 1