விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. இந்நிகழ்ச்சியில் அமீர் பாவனியை காதலிப்பதாக கூறி வந்த நிலையில் இதன் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு என தனி ஒரு உருவானது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அமீர் படம் ஒன்றினை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் பங்கு பெற்று டைட்டிலை வெற்றி பெற்றனர். அமீர் தொடர்ந்த தன்னுடைய காதலை வெளிப்படுத்த பாவனி அமைதி காத்து வந்தார் பிறகு சமீபத்தில் அமிரின் காதலை ஏற்றுக் கொண்ட நிலையில் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் இதனை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இந்த ஜோடிகள் கடந்த சில வாரங்களாக பாரிசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக அமீர் படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருடைய இயக்கத்தில் உருவாகும் அந்த படத்தில் அமீர் மற்றும் பாவனியே ஹீரோ ஹீரோயின்களாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்கு சபீர் சுல்தான் இசையமைக்க உள்ளதாகவும், செல்வா ஆர்கே எடிட்டிங் மேற்கொள்ள இருப்பதாகவும், பாலாஜி ராஜா என்பவர் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு பாவனி சின்னத்திரை நடிகை என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இவருடைய முதல் கணவர் தற்கொலை செய்துக் கொண்ட இறந்துவிட்டார். அதன் பிறகு பாவணி சிலருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தாலும் அது சரியாக அமையவில்லை எனவே நான் அன்லக்கி என கூறிவந்த நிலையில் இவ்வாறு அமிரின் மூலம் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.