Bigg boss 8 : பிக் பாஸ் எட்டாவது சீசன் இரண்டாவது வாரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீசனில் ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்களை நாமினேட் செய்ய வேண்டும் அதேபோல் பெண் போட்டியாளர்கள் ஆண் போட்டியாளர்களை நாமினேட் செய்ய வேண்டும்.
இதனால் பெண் போட்டியாளர்களுக்கு ஆடியன்ஸ் சப்போர்ட் செய்து வருகிறார்கள், அதிலும் ஜாக்லின் சாச்சனா இருவரும் சமைத்து பாத்திரமும் கழுவ வேண்டும் என கூறியவுடன் அனைவரும் பொங்கி எழுந்தார்கள் இதெல்லாம் ஓவரா இல்லையா. கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா என விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் தற்சமயம் ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் முத்துவின் ஆட்டம் ஓவராக இருக்கிறது இந்த வாரம் சத்யா தான் கேப்டன் ஆனால் முத்துவின் ஆட்டம் தான் அதிகமாக இருக்கிறது. இந்த வார இறுதியில் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாக்லின் ஆண்கள் தங்கி இருக்கும் வீட்டிற்குள் நுழைந்து விட்டார் அதனால் பிரச்சனையாகிவிட்டது கிச்சனுக்கு வரவேண்டும் என்றால் பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டு தான் வர வேண்டும் என்று ஆண்கள் விவாதம் செய்கிறார்கள்.
இங்கு யாருமே கிடையாது அதனால்தான் வந்தேன் என ஜாக்குலின் கூறுகிறார் அதற்கு முத்து இங்கேயே சம்பளம் போட்டு உட்காரவமுடியும் என பேச மேலும் அர்னவ் பொங்கி எழுந்து எங்கள் அனுமதி இல்லாமல் எங்க வீட்டுக்குள் வந்தால் நடக்கிறது வேற என மிரட்டி விடுகிறார்.
இப்படி பெண்களை ஆண்கள் ஆதிக்கம் செய்து வருகிறார்கள் இதனால் வெளியில் உள்ள மக்கள் பலரும் பெண்களுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். பெண்கள் அணியில் ஜாக்குலின் தான் சிறப்பாக விளையாடி வருகிறார் மற்றவர்கள் மேக்கப் போடுவது சாப்பிடுவது என்ற வேலையை பார்த்து வருகிறார்கள்.