பிக் பாஸ் எட்டாவது சீசன் இரண்டாவது வாரத்தில் ஆடி எடுத்து வைத்து நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது முதல் வாரத்தில் சாச்சனா வெளியே சென்றார். அதன் பிறகு ஓரிரு நாட்களில் உள்ளே வந்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் ரவிந்தர் எலிமினேட் ஆனார் அப்படி இருக்கும் நிலையில் ஆண்கள் vs பெண்கள் என பழையபடி போட்டிகள் தொடர்ந்து வருகிறது.
அதாவது இந்த போட்டியில் ஆண்கள் பெண்களை நாமினேட் செய்ய வேண்டும் பெண்கள் ஆண்களை நாமினேட் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. இருவரும் மாறி மாறி நாமினேட் செய்ய. இந்த வாரம் சௌந்தர்யாவை குறி வைக்க வேண்டும் என மொத்த ஆண் போட்டியாளர்களும் முடிவு செய்தார்கள்.
அதன்படி சவுந்தர்யாவுக்கு மட்டும் ஏழு வாக்குகள் நாமினேஷனில் பதிவானது இதில் நேரடியாக தீபக் மற்றும் ஜாக்லின் நாமினில் சிக்கி உள்ளார்கள் அதன் பிறகு பிக் பாஸ் நாமினேஷன் லிஸ்ட்டை அறிவிக்கும் பொழுது பத்து போட்டியாளர்கள் பெயர்கள் இருந்தது.
அதில் சவுந்தர்யா – 7, ரஞ்சித் – 5, ஜெப்ரி – 3, முத்துகுமரன் – 3, அர்னாவ் – 2, விஷால் -2, தர்ஷா -2, சாச்சனா – 2, தீபக் – நேரடி நாமினேஷன், ஜாக்குலின் – நேரடி நாமினேஷன் இந்த லிஸ்ட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.