Bigg Boss 7 Tamil wild Card Entry: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிரபல கானா பாடகர் மற்றும் பிரபல சீரியல் நடிகை ஆகியோர் பங்குபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 6 சீசன்களாக வெற்றிகரமாக நிறைவடைந்த பிக் பாஸ் சமீபத்தில் 7வது சீசன் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் முதல் வாரத்தின் இறுதியில் அனன்யா வெளியேறினார்.
இவரை தொடர்ந்த உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பவா செல்லதுரை வெளியேறியதால் தற்பொழுது 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். எனவே வாரம் தோறும் கடுமையான டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது அப்படி பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் மற்றும் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் இருவரும் அடித்துக் கொள்ளாத ஒரு குறையாக விளையாடி வருகின்றனர்.
எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த சீசன் அமைந்திருப்பதனால் தற்பொழுது வைல்ட் கார்டு என்ட்ரியாக சில பிரபலங்கள் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சீரியல் நடிகை அர்ச்சனா வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுக்க இருப்பது கிட்டத்தட்ட உருவாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இவரை தொடர்ந்து மற்றொரு வைல்ட் கார்டு போட்டியாளராக கானா பாடகராக புகழ்பெற்ற கானா பாலா தான் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இருக்கிறாராம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமீப காலங்களாக டாஸ்க்கள் மிகவும் டஃபாக இருப்பதனால் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனை அடுத்து இந்த வாரம் இறுதியில் எந்தக் போட்டியாளர் வெளியாகிற போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.