Bigg Boss 7 Tamil today promo 2: பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் போட்டியாளர்கள் அனைவரும் சுவாரசியமாக விளையாடி வருகின்றனர். மேலும் கடந்த வாரம் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளைப் பெற்று கானா பாலா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இவரை தொடர்ந்து இந்த வாரம் பூர்ணிமா அல்லது அக்ஷயா இவர்களில் ஒருவர் எலிமினேஷன் ஆவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ரசிகர்கள் ஏஜென்ட் டீமில் இருக்கும் சின்ன சூனியக்காரி பூர்ணிமாவை தான் முதலில் வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட குட் நைட் பட நடிகை.! மாப்பிள்ளை யார் தெரியுமா?
இத்தனை நாட்களாக மாயா உடன் சேர்ந்து ஆட்டம் போட்டு வந்த பூர்ணிமா ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றவுடன் விஷ்ணுவிடம் நெருக்கம் காண்பித்து வருகிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக பேசிக் கொள்வதினை வழக்கமாக வைத்திருக்கின்றனர். பூர்ணிமாவிற்கு அர்ச்சனாவை சுத்தமாக பிடிக்காது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
சமீப காலங்களாக அர்ச்சனாவிற்காக ஆதரவாக பேசி வந்த விஷ்ணு தற்பொழுது அர்ச்சனாவை சீண்டியிருக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் அர்ச்சனாவை தொட்டா சிணுங்கி என விஷ்ணு கூறியுள்ளார். எனவே அர்ச்சனா பிரச்சனை பண்ணனும் என்பதற்காக தான் என்ன தொட்டா சிணுங்கி என்று சொல்லி இருக்கீங்களா.
அர்ச்சனா என்னனு தெரிஞ்சதோ அந்த ஒரு வாரம் தான் என விஷ்ணு கூறுகிறார். இப்பவும் அழுகிற விஷயத்தை வைத்து தான் சொல்றீங்க அதையே குத்திக்கிட்டு இருக்கீங்க அவங்க பண்ற ஃபன்னுக்கு நானும் சிரிக்கணும் அப்பனா தான் அது ஃபன். அவங்க பண்ற ஃபன்னுக்கு நான் ஹார்ட் ஆகறானா அது ஃபன் இல்ல.
தனுஷ் – சிவகார்த்திகேயன் நட்பு உடைந்தது.. எந்த படத்தில் தெரியுமா.? நீயே இப்படி செய்யலாமா..
உங்க லைஃப்லையே மோஸ்ட் ஹைலைட் மொமென்ட் அது என்று விஷ்ணு சொல்ல எது நான் அழுதது என அர்ச்சனா கேட்கிறார். மேலும் அர்ச்சனா நீங்களும் பூர்ணிமாவும் பேசிக்கிட்டே இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்னு பாக்குறவங்களுக்கு தெரியும் என்று கூறி விடுகிறார்.