Bigg Boss 7 Tamil today promo 1: விஜய் டிவி நிகழ்ச்சி 75 நாட்களை எட்டி இருக்கும் நிலையில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது தற்பொழுதும் அனைவரும் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து போட்டியாளர்களும் அன்பால் ஒன்றிணைந்துள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரையிலும் ஏராளமான சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது. மேலும் முந்தைய சீசன்களை விட பல மாறுபாடுகளுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர். இவ்வாறு தொடர்ந்து ஒருவருக்கொருவர் பழி தீர்த்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
அட, நடிகை ரதியா இது.. ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்தவரா இவர்.!
மேலும் கமல்ஹாசன் சில போட்டியாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் சமீப காலக்கலாக பிக் பாஸ் பார்ப்பதால் மன உளைச்சல் ஏற்படுவதாக ரசிகர்கள் கருத்துக்களை கூறினர். இந்நிலையில் தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் ஃபைனலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி கடந்த வாரம் அனன்யா மற்றும் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். எனவே இந்த வாரம் முழுவதும் ஃபிரீஸ் ஸ்டாக் நடைபெற இருக்கிறது. அதற்கான இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. பொதுவாக தற்பொழுது வரையிலும் நடைபெற்ற சீசனில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் சம்பந்தமான அவர்கள் வந்துவிட்டு சென்றவுடன் தான் அடுத்த போட்டியாளரின் உறவினர்கள் வருவார்கள்.
ஆனால் இந்த முறை அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் ஒன்றாக இருக்கின்றனர். அதாவது இந்த ப்ரோமோவில் முதலில் பூர்ணிமாவின் அம்மா வருகிறார் இவரை அடுத்து அர்ச்சனாவின் பெற்றோர், சரவணன் விக்ரமின் பெற்றோர், விஜய் வர்மாவின் அம்மா ஆகியோர்கள் வந்துள்ளனர். பிறகு அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.