பிக்பாஸ் 7 ப்ரோமோ ரெடி.. தொகுப்பாளரை உறுதிப்படுத்திய விஜய் டிவி.? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

bigg boss 7
bigg boss 7

bigg boss 7 : நடிப்பிற்கு பெயர்ப்போன உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து எச் வினோத்துடன் ஒரு படம் மணிரத்தினத்துடன் ஒரு படம் லோகேஷ் உடன் ஒரு படம் பண்ண இருக்கிறார்.. இதில் முதலாவதாக கமல் இணைந்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

கமல் ஒரு பக்கம் படங்களில் பிசியாக நடிக்க மறுபக்கம் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் பல்வேறு டாப் நடிகரின் படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார் இது போதாத குறைக்கு அரசியலில் வேற கெத்து காட்டி வருகிறார்.

இதோடு முடிந்து விட்டதா என்று பார்த்தால் இல்லை சின்ன திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசன் ஆக நடத்தி வருகிறார். அதன்படி பிக் பாஸ் ஏழாவது சீசனையும் இவர்தான் நடத்துவார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அது உறுதியும் படுத்தப்பட்டுள்ளது. ஆம் பிக்பாஸ் 7 வது சீசனின் ப்ரோமோ சூட்டிங் நேற்று நடைபெற்றது.

இதில் கமலஹாசன் கலந்து கொண்டார் என சொல்லபடுகிறது. ஆனால் பிக் பாஸ் தொடங்கும் தேதி அறிவிக்கப்படவில்லை ஒரு வேலை அரசியல் காரணமாக சீக்கிரம் தொடங்கலாம் அல்லது வழக்கமாக எப்பொழுது பிக்பாஸ் சீசன் ஆரம்பிக்குமோ அதே தேதியில் ஆரம்பிக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஆனால் பிக் பாஸ் சீசன் 7 கமலஹாசன் தொகுத்து வழங்குவது உறுதி மற்ற சீசன் போலவே இந்த சீசனையும் அவர் சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்குவது அதுமட்டுமல்லாமல் சம்பளமாக பல கோடிகளை வாங்குவார் என கூறப்படுகிறது. அடுத்ததாக பிக்பாஸ் 7 போட்டியாளர்களை தேர்வு செய்ய விஜய் டிவி முயற்சிக்கும் என கூறப்படுகிறது.